வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

படிக்க வேண்டாம், அப்படியே மூளைக்குள் ஏற்றலாம்!


3

அமெரிக்காவிலுள்ள, 'எச்.ஆர்.எல்., லேபரெட்டரீஸ்' என்ற ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதியவற்றை கற்றுக் கொள்வதிலுள்ள தடுமாற்றத்தையும், சிரமத்தையும் வெகுவாகக் குறைக்க, ஒரு தொழில் நுட்பத்தை சோதித்து வருகின்றனர்.
மேட்ரிக்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில், நாயகன் நியோ (கியானு ரீவ்ஸ்), குங்பூ கற்றுக்கொள்வதற்கு முன் ஒரு காட்சி வரும். குங்பூவின் விதிகள், தாக்குதல் முறைகள், தடுப்பு முறைகள் என எல்லா தகவல்களையும் கணினியிலிருந்து சில கம்பிகள் மூலமாக அவரது மூளைக்குள் செலுத்தப்படும். அடுத்த நிமிடமே அவர் ஒரு தேர்ந்த குங்பூ நிபுணரைப் போல சண்டை செய்வார்.
இதேபோல, எச்.ஆர்.எல்., விஞ்ஞானிகளும் ஒரு, 'சிமுலேட்டர்' சாதனத்தை உருவாக்கியுள்ளனர். அனுபவமுள்ள விமானிகளின் மூளை பதிவுகளை தேர்ந்தெடுத்தனர். ஒரு புதிய பயிற்சி விமானி பயிற்சி எடுக்கும்போது, அந்த தகவல்களை நேரடியாக அவரது மூளைக்குள் செலுத்தினர். இதனால், புதிய விமானியின் விமானம் செலுத்தும் திறன் வெகுவாக முன்னேறியதாக எச்.ஆர்.எல்., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பரிசோதனை அளவில் இருக்கும் இந்த மூளைத் தூண்டல் தொழில்நுட்பம் வந்தால், மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகும் விதமே அடியோடு மாறிவிடும்.

No comments:

Post a Comment