புதுடெல்லி,
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பயணத்துக்கான புதிய திட்டங்களை இந்தியன் ரெயில்வே இலாகா அமல்படுத்த தொடங்கி உள்ளது. தினமும் 2 ஆயிரத்து 300 ரெயில்களில், ரெயில்வே பாதுகாப்பு படையினரும், 2 ஆயிரத்து 200 ரெயில்களில் ரெயில்வே போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
மாநகரங்களில் ஓடும் பெண்களுக்கான சிறப்பு ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்களின் பெண்கள் பெட்டிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையின் மகளிர் பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதேபோல இரவு மற்றும் அதிகாலையில் இயங்கும் ரெயில்களில் பயணிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு பணிகளை ரெயில்வே ஊழியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ரெயில்வே வளாகங்களில் நடக்கும் திருட்டு, வழிப்பறி மற்றும் குற்றச்சம்பவங்களை தடுப்பது தொடர்பாக, ரெயில்வே பாதுகாப்பு படையினர் மாநில போலீசுடன் இணைந்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். தற்போது 311 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இனிமேல் சோதனை நடவடிக்கையாக சில ரெயில் பெட்டிகளிலும் கேமரா பொருத்தப்பட உள்ளது. வழிதவறும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக மேலும் 20 ரெயில் நிலையங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment