அடையாளத்தை (logo) உருவாக்க...
தொழிலில்வெற்றி பெறுவதற்கு ஓர் அடையாளம் முக்கியம். அவ்வாறு உங்கள் தொழிலுக்கென்றோ உங்களுக்கென்றோ ஓர் அடையாளத்தை (logo) உருவாக்கித் தருகிறது www.designmantic.com. இந்த தளத்தில் உங்களின் பெயர் அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயர், எந்த வகையான தொழில் என்பதைப் பதிவு செய்தால் பல்வேறு வடிவங்களிலான அடையாளங்களை வழங்குகிறது. அதில் நீங்கள் விரும்பினால் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
நேரடியாக ஒளிபரப்ப...
நாம் செல்போன்களில் எடுக்கும் வீடியோக்களை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியுமா? "ஆம்' என்கிறது Bambuser.com. முதலில் இந்த இணையதளத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நாம் வைத்திருக்கும் செல்போன்களின் இயங்குதளத்திற்கு ஏற்ற செயலியை இந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அவற்றை நிறுவி செயலியைத் திறக்க வேண்டும். இப்போது நாம் படம்பிடிக்கும் காட்சிகளை அப்படியே அந்தத் தளம் மூலம் உலகிற்கு நேரடியாக ஒளிபரப்ப முடியும்.
விரைவாக வீடியோ காட்சிகளை இணைக்க...
செல்போன்கள், வெப்கேமரா போன்றவற்றில் பதிவு செய்த வீடியோ காட்சிகள் தனித்தனியாக இருக்கின்றனவா? அவற்றை ஒரே வீடியோ காட்சியாக இணைக்க வேண்டுமா? இதற்காகவே விடியோ ஜாய்னர் என்ற மென்பொருளை இலவசமாக வழங்குகிறது www.freevideojoiner.com என்ற இணையதளம். இந்த மென்பொருளை கணினியில் நிறுவி இணைக்க வேண்டிய வீடியோ பைலை செலக்ட் செய்து ஒரு சில நிமிடங்களில் ஒரே வீடியோ பைலாக மாற்றலாம்.
புதிய சமூக வலைத்தளம்
சமூக வலைதளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ட்விட்டர் தளத்தில் தலைவர்கள், பிரபலமானவர்கள் பதிவிடும் கருத்துகளை பலர் பார்வையிடுவதுடன் கருத்துகள் தெரிவிக்கின்றனர். ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிட்ட கணக்குதாரர் பல கணக்குதாரரை சேர்த்துக் கொண்டு தங்களின் கருத்துகள், புகைப்படங்கள், வீடியோக்களைப் பறிமாறிக் கொள்கின்றனர். இவற்றிற்கிடையே தங்களின் புதுமையான கண்டுபிடிப்புகள், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளைப் பதிவிட்டு இளம் தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது புதிய சமூக வலைதளமான மேக்கர்ஸ்பேஸ் www.makerspace.com
No comments:
Post a Comment