வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

56 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார் மயில்சாமி அண்ணாதுரை, சாய்னா நேவால் ஆகியோரும் விருது பெற்றனர்

புதுடெல்லி
56 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சாய்னா நேவால் ஆகியோரும் விருதுகளை பெற்றனர்.
பத்மவிபூஷண் விருதுமத்திய அரசு குடியரசு தினத்தன்று 112 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் முதல்கட்டமாக 56 பேருக்கு விருது வழங்கும் விழா நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இதில் 5 பேருக்கு பத்மவிபூஷண், 8 பேருக்கு பத்மபூஷண், 43 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
விருது பெற்றவர்களில் முக்கியமானவர்கள் விவரம் வருமாறு:–
ரிலையன்ஸ் குழுமங்களின் நிறுவனரான திருபாய் அம்பானியின் (மரணத்துக்கு பின்னர் வழங்கப்படும் விருது) பத்ம விபூஷண் விருதை அவரது மனைவி கோகிலாபென் அம்பானி பெற்றுக்கொண்டார். ஜம்மு–காஷ்மீர் முன்னாள் கவர்னர் ஜக்மோகன், பரதநாட்டிய கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, வாழும்கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோரும் பத்மவிபூஷண் விருதுகளை பெற்றனர்.
மயில்சாமி அண்ணாதுரைபத்மபூஷண் விருது பெற்றவர்கள்:– பிரபல இந்தி நடிகர் அனுபம்கெர், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், முன்னாள் கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வினோத்ராய்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சினிமா இயக்குனர் மதூர் ஆர்.பண்டார்கர், இந்தி நடிகர் அஜய்தேவ்கான், சமுதாய தொண்டு ஆற்றிவரும் தமிழ்நாட்டை சேர்ந்த தாமல் கண்டடை சீனிவாசன், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எம்.என்.கிருஷ்ணமணி, சென்னை மெட் இந்தியா ஆஸ்பத்திரியின் நிறுவன தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் மதுரையை சேர்ந்தவர். இவர் மருத்துவ படிப்பின்போதே 14 தங்கப்பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு அடுத்த மாதம்விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த், நடிகை பிரியங்கா சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்பட எஞ்சியவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment