புதுடெல்லி,
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உலக அளவில் ஆய்வு நடத்தி பொருளாதாரம், முக்கிய தொழில்கள், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வதற்கு உகந்த நாடுகளாக 60 நாடுகளை தேர்வு செய்து உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 22–வது இடம் கிடைத்து இருக்கிறது. இந்த தகவல் சமீபத்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இதேபோல், இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு மிகவும் விரும்பும் நாடாக தாய்லாந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு சுற்றுலா செல்ல விரும்புவதாக பெரும்பாலான இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியர்கள் உள்நாட்டில் சுற்றுலா செல்ல விரும்பும் நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும், மும்பை 2–வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கோவா, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்கள் முறையே 3–வது, 4–வது மற்றும் 5–வது இடங்களில் உள்ளன.
No comments:
Post a Comment