வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

தொலைக்காட்சி, வானொலியில் தேர்தல் பிரசாரம் தலா 45 நிமிடம் வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு

புதுடெல்லி,

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக மே 16–ந் தேதி தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்காளத்தில் 6 கட்டங்களாகவும், அசாமில் 2 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் அரசு தொலைக்காட்சி, அகில இந்திய வானொலியில் தேசிய கட்சிகளும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதன்படி தேசிய கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் தலா 45 நிமிடமும், அகில இந்திய வானொலியில் தலா 45 நிமிடமும் பிரசாரம் செய்ய முடியும்.

தமிழ்நாட்டில் சென்னை தொலைக்காட்சி நிலையத்திலும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திலும் அரசியல் கட்சித்தலைவர்கள் செய்யும் பிரசாரத்தை மாநிலம் முழுவதும் உள்ள பிற நிலையங்களும் ஒலிபரப்பும்.

No comments:

Post a Comment