4
திருவனந்தபுரம்: கோடை வெப்பம் காரணமாக கேரளாவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை மாற்றி அமைத்து அம்மாநில தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரளாவில் பகல் நேரத்தில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களுக்கு சூரிய கதிர்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், கடந்த 27-ம் தேதி முதல் பகல் நேரத்தில் தொழிலாளர்களின் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதன் படி பகல் நேர ஷிப்ட் பார்க்கும் தொழிலாளர்கள் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணிக்குள் தங்கள் எட்டு மணி நேர வேலை செய்தால் போதுமானது.
இவர்களுக்கு பகல் 12 முதல் மாலை மூன்று மணி வரை ஓய்வு நேரம் வழங்கப்பட்டுள்ளது. காலையில் தொடங்கும் ஷிப்டுகள் பகல் 12 மணிக்கு முடிக்கப்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். மதிய வேளைகளில் தொடங்கும் ஷிப்டுகள் மாலை மூன்று மணிக்கு தொடங்கும் வகையில் மாற்ற வேண்டும்.இந்த உத்தரவு ஏப்., 30 வரை அமலில் இருக்கும்.

No comments:
Post a Comment