வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

இந்தியாவின் முதல் 'டிஜிட்டல்' மாநிலம் ஆனது கேரளா

திருவனந்தபுரம்:அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் புகுத்தி, இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலமாக கேரளா உருவாகி உள்ளது.

அதற்கான காரணங்கள் இவை:

1. மொபைல் போன்:
மொபைல் போன் பயன்பாடு, கேரள மக்களிடம் அபரிமிதமாக இருக்கிறது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையே 3.3 கோடி மட்டுமே. ஆனால் அங்கு 3.1 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன.இது மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
2. வீடுகளில் இன்டர்நெட்:
கேரளாவில் 20 சதவீத வீடுகளில் பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளன. 15 சதவீத வீடுகளில் மொபைல் போன் இன்டர்நெட் இணைப்புகள் உள்ளன.நாட்டிலேயே கேரளாவில் தான், அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் ஆப்டிகல் பைபர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
3. அக்ஷயா மையங்கள்:
கேரளாவில் தான் நாட்டிலேயே அதிக அக்ஷயா மையங்கள் அமைக்கப்பட்டு, தண்ணீர் வரி, மின் கட்டணம், ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவை வழங்கப்படுகின்றன.
4. பள்ளிகளில் கம்ப்யூட்டர்:
பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி புகுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு 4 லட்சம் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி அளிக்கப்படுகிறது. இதுவரை 39 லட்சம் மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவுடவ் இருக்கின்றனர்.
5. பேப்பர் இல்லா நி்ரவாகம்:
பேப்பரே இல்லாத நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன பதிவு, நிலங்கள் பதிவு போன்றவை முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment