வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிப்ஸ் ; ரேடியோ மூலம் மோடி - சச்சின் உரை

புதுடில்லி : மன் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாதம் தோறும் வாரத்தின் இறுதி ஞாயிற்று கிழமையில் உரையாற்றி வருகிறார் . பிரதமராக மோடி பொறுப்பேற்ற நாள் முதல் 17 நிகழ்ச்சி நடந்துள்ளது.இன்றைய உரையில் கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரும் பிரதமர் மோடியுடன் பங்கேற்றனர் .

பிரதமர் மோடி இன்றைய (28 ம் தேதி ) ரேடியோ உரையில் பேசுகையில்; தேர்வு எழுத காத்திருக்கும் பத்தாம் வகுப்பு 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கடின உழைப்புடன் முன்னோக்கி செல்லும் போது யாராலும் இந்த முன்னேற்றத்தை தடுக்க முடியாது . ஒவ்வொரு தேர்வும் நமது வெற்றியின் படிக்கல்லாக அமையும். இது பல்வேறு சாதனைகளுக்கு வித்திடும்.
மாணவர்கள் தேர்வு நேரத்தில் தங்களின் உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். தேர்வு குறித்து அச்சம் நீங்கி பதட்டம் இன்றி தேர்வு எழுத வேண்டும். மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். தேர்வு என்பது மார்க்குகள் குறி வைத்து செயல்படுவது அல்ல. தேர்வு என்பது நாம் சரியான பாதையில் செல்கிறோமா, இல்லையா என்பதை உணரத்தான், ஆகையால் யாரும் தேர்வில் வரும் முடிவுகளால் மனம் தளரக்கூடாது .முன்கூட்டியே தூங்கி அதிகாலையில் எழுந்து தாங்கள் படித்ததை திருப்பி நினைவில் நிறுத்துங்கள் . பலர் இரவு நேரங்களில் போனில் நேரத்தை செலவிடுகின்றனர் . இது மனது மற்றும் மூளைக்கு இடையூறை தரும், இதனை நிறுத்துங்கள் .

மனம் விட்டு சிரியுங்கள் உங்களின் மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கணித மேதை எவ்வித பயிற்சியும் எடுக்கவில்லை .ஆனால் கணிதத்திற்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது . மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியமான அடிப்படை இதனை கடைபிடிக்க வேண்டும். யோகா செய்யுங்கள். இது மன திறம் அதிகரித்து நன்மை பயக்கும். 125 கோடி மக்களிடம் நான் நாளை தேர்வு எழுதவுள்ளேன் , பார்லியில் நாளை எனது அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் . இவ்வாறு மோடி பேசினார்.
விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை: செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ரேடியோ உரையில் பங்கேற்று பேசுகையில் ; தூக்கம் - அமைதி மாணவர்களுக்கு அவசியம் . அழுத்தம் இருக்க கூடாது, விரைவில் தூங்கும் போது காலையில் தேர்வு எழுதுவது மிக சுலபம் . நம்பிக்கையுடன் செயல்படுங்கள் . இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்: சச்சின் ; கிரிக்கெட் வீரர் சச்சின் பேசுகையில் ; மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் . ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் பெரும் எதிர்பார்பை வைத்துள்ளனர் . நீங்கள் இதன் மூலம் அழுத்தத்திற்கு உள்ளாக கூடாது. தேர்வில் நாம் வெற்றி பெற நாள்தோறும் உழைக்க வேண்டும். இலக்கு நிர்ணயித்து வெற்றிகரமான நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படுங்கள், நேர்மையான விளைவுகள் , வெற்றி கிட்டும் எதிர்பார்ப்புகள் தான் நமக்கு வெற்றியை தரும். நான் கிரிக்கெட் விளையாடும் போது எதிர்பார்ப்புகள் இருக்கும். இது வெற்றியை தரும், எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும். என்றார்.

No comments:

Post a Comment