வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

மனிதர்களுக்கு மிக அதிகம்




நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்ற கருத்து உள்ளது. ஆனால் அவற்றை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஒருவர் மேற்கொண்ட ஆய்வில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டு பிடித்தார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவை எவை என கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1879-ம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா என்பவர் வெளியிட்ட கட்டுரையில் விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்திருந்தது பொய் என நிரூபணம் ஆகியுள்ளது.

சமையற் கலைஞரின் சாதனை











ஐதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும்போது உருகிவிடுகிறது. இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் பாதுகாப்பானது ஆகும். இதன் விலை வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாம்.

வீட்டுக் குறிப்புகள்

ஸ்டீல் டப்பாக்களின் மூடி லூசாகி விட்டதா? ஸ்டீல் டப்பாவின் மீது ஏதாவது ஒரு தாளைப் பிரித்துப் போட்டு மூடியை அழுத்தி மூடுங்கள். மீதம் உள்ள தாளை நீக்கி விடுங்கள் இப்போது டப்பா இறுக்கமாகிவிடும். எறும்புகள், சிறுபூச்சிகள் புகாது. கையாள்வதும் எளிது.

சிறிது செலவு செய்து " வாட்டர் லெவல் கண்ட்ரோலர்' வைத்துக் கொண்டால் தண்ணீர் மோட்டாரை ஆன், ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எப்போதும் தொட்டியில், குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். நமக்கும் நோ டென்ஷன்.

சாதாரண பூட்டு, கதவிலேயே பொருத்தப்பட்ட பூட்டுத் துவாரம் போன்றவை திறந்து மூடாமல் மக்கர் செய்தால் கொஞ்சம் பெர்ஃப்பூமை துவாரங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இனி சுலபமாக திறக்கலாம்.

வாய் குறுகிய கண்ணாடி பாட்டில்கள், ஜாடிகள் இவற்றில் அழுக்கு சேர்ந்துவிட்டால் சிறிது அரிசியை அவற்றில் போட்டு அரைக் கோப்பை வினிகர் விட்டு நன்கு குலுக்கி குளிர்ந்த நீரில் கழுவ அழுக்கு விரைவில் நீங்கிவிடும்.

எப்பொழுது காஸ் அடுப்பை அணைப்பதானாலும் முதலில் சிலிண்டரை மூடிவிட்டு மேலே அணையுங்கள். ஒவ்வொரு தடவையும் டியூபில் இருக்கும் காஸ் வீணாகாமல் இருக்கும். காஸýம் ஒரு வாரம் கூடுதலாக வரும்.

இஞ்சியை ஃப்ரீசரில் வைத்தால் ரொம்பப் புதியதாக இருக்கும். துருவிப் போடுவதும் சுலபமாக இருக்கும்.

சமையல் அறையில் பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப்பர் நார்களை கட்டாயம் மாதம் ஒருமுறை மாற்றிவிட்டு புதியதாக உபயோகிக்க வேண்டும்.

துணிகள் வைக்கும் பீரோவில் ஒன்றிரண்டு தாழம்பூ இதழ்களைப் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாமல் இருப்பதோடு நல்ல வாசனையாகவும் இருக்கும்.

பழைய நைலான் சாக்ஸýகளை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தினால் பாத்திரங்களில் கீறல் விழாமலும், பளிச்சென்றும் இருக்கும்.

பெருங்காய பவுடர் வரும் டப்பாக்கள் காலியானதும் அதில் சோப்பு தூள் போட்டு ஸிங்க் அருகில் வைத்துக் கொண்டால், சாப்பிட்ட தட்டுகளை அவசரத்திற்கு தேய்க்க சுலபமாக இருக்கும்.

வீடு கட்டும்போது மீந்த டைல்ஸ்களை சமையலறையில் எண்ணெய், நெய், ஊறுகாய் ஜாடிகளுக்கு அடியில் வைக்க பயன்படுத்தலாம். சமையல் மேடையும் சுத்தமாக இருக்கும்.

பால், நெய் காய்ச்சிய பாத்திரங்கள், எண்ணெய்ப் பாத்திரங்கள் ஆகியவற்றில் கோதுமை மாவைப் போட்டு புரட்டி சப்பாத்தி தயாரித்தால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். அந்தப் பாத்திரங்களைக் கழுவுவதும் சுலபம்.

வெந்நீர் மருத்துவம்!

அலைந்து திரிந்ததால் பாதங்களில் வலி இருந்தால்,  வெந்நீர்தான் கைகொடுக்கும் மருந்து. ஒரு பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி  அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். பாதவலி மறைந்து விடும்.
* ஏதாவது எண்ணெய்ப் பலகாரம் இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு  கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர்  வெந்நீர் எடுத்து நிதானமாக பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும்.
* தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் உடம்பில் சேரும் கொழுப்பு கரைந்து விடும் என்று மருத்துவர்கள்  கூறுகிறார்கள்.
* உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால் பித்தத்தினால் ஏற்படும் வாய்க் கசப்பும் மறைந்துவிடும்.
* உடல் வலிக்கும் போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு போட்ட வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால் நன்றாக தூக்கம் வருவதோடு உடல் வலியும் பறந்துவிடும்.
* அடிக்கடி வெந்நீர் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்களுக்கு தலைவலியே வருவதில்லை.
* அஜீரணத்தால் உண்டாகும் தலைவலி வெந்நீர் அருந்துவதினால் குணமாகும்

மைக்ரோ கதை

தினம் தினம் அம்மா - மனைவியிடையே நடக்கும் போராட்டத்தில் இருந்து விடுபட்டு, அலுவலக வேலையாக வெளிமாநிலம் வந்தான் சேகர்.
மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வந்த மனைவிக்கும், தன் வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும் கைபேசியில் பேச மனமில்லாமல், தனித்தனியே கடிதங்கள் எழுதினான்.
"என் அம்மாவின் மோசமான குணம்தான் உனக்குத் தெரியுமே... இன்னும் கொஞ்சம் காலம்தான் அவர்கள் வாழ்வு. அதுவரை பொறுமையாக இரு' என மனைவிக்கும்,
"என்ன செய்ய? இவளைக் கட்டித் தொலைச்சாச்சு. கொஞ்சநாள் பார்ப்போம். சரி வரவில்லையென்றால் அவள் வீட்டிற்கே விரட்டிவிடுவோம். அதுவரைக்கும் பொறுமையா இருங்க'' என்று அம்மாவுக்கும் எழுதிய கடிதங்களை உறையில் போட்டு தபாலில் சேர்த்துவிட்டு, நிம்மதியாக இருந்தான், கவனக்குறைவாக அம்மாவுக்கு எழுதிய கடிதத்தை மனைவி முகவரிக்கும், மனைவிக்கு எழுதிய கடிதத்தை அம்மா முகவரிக்கும் மாற்றிஅனுப்பியது தெரியாமல்