அலைந்து திரிந்ததால் பாதங்களில் வலி இருந்தால், வெந்நீர்தான் கைகொடுக்கும் மருந்து. ஒரு பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். பாதவலி மறைந்து விடும்.
* ஏதாவது எண்ணெய்ப் பலகாரம் இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாக பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும்.
* தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் உடம்பில் சேரும் கொழுப்பு கரைந்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால் பித்தத்தினால் ஏற்படும் வாய்க் கசப்பும் மறைந்துவிடும்.
* உடல் வலிக்கும் போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு போட்ட வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால் நன்றாக தூக்கம் வருவதோடு உடல் வலியும் பறந்துவிடும்.
* அடிக்கடி வெந்நீர் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்களுக்கு தலைவலியே வருவதில்லை.
* அஜீரணத்தால் உண்டாகும் தலைவலி வெந்நீர் அருந்துவதினால் குணமாகும்
வருக வணக்கம்
வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்
வெந்நீர் மருத்துவம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment