ஸ்டீல் டப்பாக்களின் மூடி லூசாகி விட்டதா? ஸ்டீல் டப்பாவின் மீது ஏதாவது ஒரு தாளைப் பிரித்துப் போட்டு மூடியை அழுத்தி மூடுங்கள். மீதம் உள்ள தாளை நீக்கி விடுங்கள் இப்போது டப்பா இறுக்கமாகிவிடும். எறும்புகள், சிறுபூச்சிகள் புகாது. கையாள்வதும் எளிது.
சிறிது செலவு செய்து " வாட்டர் லெவல் கண்ட்ரோலர்' வைத்துக் கொண்டால் தண்ணீர் மோட்டாரை ஆன், ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எப்போதும் தொட்டியில், குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். நமக்கும் நோ டென்ஷன்.
சாதாரண பூட்டு, கதவிலேயே பொருத்தப்பட்ட பூட்டுத் துவாரம் போன்றவை திறந்து மூடாமல் மக்கர் செய்தால் கொஞ்சம் பெர்ஃப்பூமை துவாரங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இனி சுலபமாக திறக்கலாம்.
வாய் குறுகிய கண்ணாடி பாட்டில்கள், ஜாடிகள் இவற்றில் அழுக்கு சேர்ந்துவிட்டால் சிறிது அரிசியை அவற்றில் போட்டு அரைக் கோப்பை வினிகர் விட்டு நன்கு குலுக்கி குளிர்ந்த நீரில் கழுவ அழுக்கு விரைவில் நீங்கிவிடும்.
எப்பொழுது காஸ் அடுப்பை அணைப்பதானாலும் முதலில் சிலிண்டரை மூடிவிட்டு மேலே அணையுங்கள். ஒவ்வொரு தடவையும் டியூபில் இருக்கும் காஸ் வீணாகாமல் இருக்கும். காஸýம் ஒரு வாரம் கூடுதலாக வரும்.
இஞ்சியை ஃப்ரீசரில் வைத்தால் ரொம்பப் புதியதாக இருக்கும். துருவிப் போடுவதும் சுலபமாக இருக்கும்.
சமையல் அறையில் பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப்பர் நார்களை கட்டாயம் மாதம் ஒருமுறை மாற்றிவிட்டு புதியதாக உபயோகிக்க வேண்டும்.
துணிகள் வைக்கும் பீரோவில் ஒன்றிரண்டு தாழம்பூ இதழ்களைப் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாமல் இருப்பதோடு நல்ல வாசனையாகவும் இருக்கும்.
பழைய நைலான் சாக்ஸýகளை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தினால் பாத்திரங்களில் கீறல் விழாமலும், பளிச்சென்றும் இருக்கும்.
பெருங்காய பவுடர் வரும் டப்பாக்கள் காலியானதும் அதில் சோப்பு தூள் போட்டு ஸிங்க் அருகில் வைத்துக் கொண்டால், சாப்பிட்ட தட்டுகளை அவசரத்திற்கு தேய்க்க சுலபமாக இருக்கும்.
வீடு கட்டும்போது மீந்த டைல்ஸ்களை சமையலறையில் எண்ணெய், நெய், ஊறுகாய் ஜாடிகளுக்கு அடியில் வைக்க பயன்படுத்தலாம். சமையல் மேடையும் சுத்தமாக இருக்கும்.
பால், நெய் காய்ச்சிய பாத்திரங்கள், எண்ணெய்ப் பாத்திரங்கள் ஆகியவற்றில் கோதுமை மாவைப் போட்டு புரட்டி சப்பாத்தி தயாரித்தால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். அந்தப் பாத்திரங்களைக் கழுவுவதும் சுலபம்.
No comments:
Post a Comment