மனித முடியை விட 2 ஆயிரம் மடங்கு மிக மெல்லிய லென்சை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி யூருய் லாரி லூ தலைமையிலான குழு இந்த லென்சை தயாரித்திருக்கிறது.
இதற்கு முன்னர் மிக மெல்லியதாக 50 நானோ மீட்டர் தடிமனான லென்ஸ் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அதையும் விட மெல்லியதாக 6.3 நானோ மீட்டர் தடிமனில் இந்த லென்ஸ் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி, குறிப்பிட்ட விஞ்ஞானிகள் குழுவினர், 'மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் இதன் பயன்பாடு மிகச் சிறந்ததாக இருக்கும், வளைந்த திரையை கொண்ட கணினிகளிலும் இதைப் பயன்படுத்தலாம்' என்கின்றனர்.
மடிக்கப்படக்கூடிய திரையை கொண்ட கணினிகள், தொலைக்காட்சிகளில் ஏற்கனவே இந்த லென்ஸ் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த லென்சை பயன்படுத்தி மிக மலிவான விலையில் மின்னணுச் சாதனங்களை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

No comments:
Post a Comment