புதுடெல்லி,
பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார், தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தாதாசாகேப் பால்கே விருதுதிரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் ‘தாதாசாகேப் பால்கே’ என்ற உயரிய விருதினை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது தங்க தாமரை, ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு ஆகியவை அடங்கியது.
இந்த ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்காக பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
78 வயதான அவர், ‘புரப் அவுர் பஸ்கிம்’, ‘உப்கர்’ மற்றும் ‘கிராந்தி’ உள்ளிட்ட தேசப்பற்று மிக்க படங்களில் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். இது மட்டுமின்றி, ‘ஹரியாலி அவுர் ராஸ்தா’, ‘வோ கவுன் தி’ மற்றும் ‘டோ படன்’ ஆகிய படங்களும் அவரது நடிப்புத்திறமையை பறைசாற்றுகின்றன.
பாரத்குமார்நடிகர் மனோஜ் குமாரின் இயற்பெயர் ஹரிகிருஷ்ணா கிரி கோஷ்வாமி. இவர் பாகிஸ்தானின் அபோத்தாபாத் நகரில் பிறந்தவர். 1960–ம் ஆண்டுகளில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த மனோஜ் குமார், தொடக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்தார்.
பின்னர், தேசப்பற்றுமிக்க கதைகளின் பக்கம் அவரது கவனம் திரும்பியது. அதன்படி, தேசப்பற்று மிகுந்த படங்களில் கதாநாயகனாக நடித்தார். பல படங்களுக்கு இயக்குனராகவும் திகழ்ந்தார். அவரது தேசப்பற்றை எண்ணி ரசிகர்கள் அவரை ‘பாரத்குமார்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.
பத்ம ஸ்ரீ விருது1967–ம் ஆண்டில் மனோஜ் குமாரின் நடிப்பில் வெளியான ‘உப்கர்’ படம் சக்கை போடு போட்டது. இந்த படத்துக்காக அவருக்கு தேசிய திரைப்பட விருது கிடைத்தது. அதன்பின்னர், திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக கடந்த 1992–ம் ஆண்டு மனோஜ் குமாருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருதை மத்திய அரசு வழங்கியது நினைவுகூரத்தக்கது

No comments:
Post a Comment