வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய விஞ்ஞானிகள் சாதனை

ஸ்ரீஹரிகோட்டா,
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தொடர்ந்து கடல் சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 5 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
2013–ம் ஆண்டு ஜூலை 1–ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஏ செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி. சி–22 ராக்கெட் மூலமும் கடந்த ஆண்டு ஏப்ரல் 4–ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–பி செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி–24 ராக்கெட் மூலமும் அக்டோபர் மாதம் 16–ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–சி செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி. சி–26 ராக்கெட் மூலமும் கடந்த ஆண்டு மார்ச் 28–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–டி, செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட் மூலமும் கடந்த ஜனவரி 20–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–இ செய்ற்கைகோள், பி.எஸ்.எல்.வி. சி–31 ராக்கெட் மூலமும் விண்ணில் செலுத்தப்பட்டன.
பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணுக்கு செலுத்தியது.
வெற்றிகரமாக பாய்ந்ததுஇதற்கான, இறுதி கட்ட ஆயத்த பணிகள் எனப்படும் ‘‘கவுண்ட்டவுன்’’ முடிந்து, நேற்று மாலை 4 மணி ஒரு நிமிடத்துக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் என்ற செயற்கைகோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.
3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2–ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட்டின் எடை 320 டன் ஆகும். செயற்கைகோள் 1,425 கிலோ எடை கொண்டது.
செயற்கை கோள் பிரிந்ததுபுறப்பட்ட 20 நிமிடம் 11 வினாடிகளில் ராக்கெட் பூமியில் இருந்து 20 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. திட்டமிட்ட அந்த உயரத்தை அடைந்ததும், 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் வெற்றிகரமாக இலக்கில் கொண்டு சேர்த்தது.
இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கை கோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.
விஞ்ஞானிகள் மகிழ்ச்சிராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கடல் ஆராய்ச்சிஇந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைகோள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கலாம்.
மேலும் இந்த செயற்கைகோளின் மூலம் பேரிடர் மேலாண்மை, செல்போன் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுனர்களுக்கு குரல் வழி மூலம் முறையாக ஓட்டச் சொல்லி வாகனங்களை இயக்க செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த செயற்கைகோளின் ஆயுள்காலம் 12 வருடம். இதேபோல இன்னும் ஒரு செயற்கைகோளை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது.
1 நிமிடம் காலதாமதம்பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட்டை மாலை 4 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், வளிமண்டலத்தில் உள்ள செயற்கைக்கோள் கழிவுகள் மீது மோதாமல் இருப்பதற்காக ராக்கெட்டை ஏவுவது 1 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டு 4 மணி 1 நிமிடத்திற்கு விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் திட்டமிட்டபடி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது என்று விஞ்ஞானிகள் கூறினர்

No comments:

Post a Comment