ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பாவர்கள் இனி netpake போடவும் வேண்டாம், msg recharge பண்ணவும் வேண்டாம்
உங்கள் போன் ஆண்ட்ராய்டாக இருந்தால் இனி மெசேஜ்களை டைப் செய்து தான் அனுப்ப வேண்டும் என்றில்லை. உங்கள் கையாலேயே எழுதி அனுப்பலாம். அதற்கான வசதியை கூகுள், ஹேன்ட்ரைட்டிங் இன்புட் (Google Handwriting Input ) எனும் புதிய அப்ளிகேஷன் மூலம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 82 உலக மொழிகளில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட்போனில் என்னதான் சூப்பர் கீபோர்ட்கள் வந்துவிட்டாலும் கூட, பலருக்கு டைப் செய்வது என்றால் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். இதற்காக கூகுள், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கைவிரலிலேயே எழுதி அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கையால் எழுதப்படும் எழுத்துக்கள் ஆப்டிகல் கேரக்டர் ரிகக்னேஷன் முறையில் புரிந்து கொள்வதன் அடிப்படையில் இந்த வசதி செயல்படுகிறது.
கூகுள் ஹேன்ட்ரைட்டிங் இன்புட் அப்ளிகேஷன் மூலம், டச் ஸ்கிரீனில் கைவிரலால் பக்குவமாக மற்றும் ஸ்டைலீசாகவும் எழுதலாம். எழுத்துக்கள் மட்டும் அல்ல, இமேஜிகள் என சொல்லப்படும் ஐகான்களையும் இதில் வரைந்து காட்டலாம். ஒரு முறை இந்த அப்ளிகேஷனை download செய்துவிட்டால் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம். மற்ற மெசேஜிங் சேவைகளிலும் இதை பயன்படுத்தலாம். ஏற்கனவே கூகுள் மொழிபெயர்ப்பு வசதியில் இது போன்ற அம்சம் இருக்கிறது. அதை ஆய்வு மூலம் விரிவாக்குவதற்காக இந்த வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment