தீராத பிரச்னைகளும் வழக்குகளும் தீர்த்து வைக்கும் ஸ்ரீ மணிகண்டேஸ்வர பெருமாள் ஆலய திருகுடமுழுக்கு துவக்க விழா
By Somasundaram Thirumalaikumarasamy
திருமால்பூர் ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ மணிகண்டேஸ்வர ஸ்வாமி ஆலய குடமுழுக்கு திருப்பணி துவக்க விழா செப்.10-ம் தேதி நடைபெறுகிறது
வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், திருமாற்பேறு (திருமால்பூர்) கிராமத்தில் எழுந்தருளி பன்னெடுங்காலமாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ அஞ்சாக்ஷி சமேத ஸ்ரீ மணிகண்டேஸ்வர ஸ்வாமி ஆலய திருப்பணி துவக்க விழா, செப்டம்பர் 10-ம் தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்குத் தொடங்க உள்ளது.
ஜீர்ணோத்தாரணம் செய்து, 2016-ம் ஆண்டு தை மாதத்தில் மஹா கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிவலோகம் சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் நால்வர் போற்றாள் போற்றும் மன்றம் இணைந்து இந்தத் திருப்பணியை சேவையைச் செய்கின்றனர்.
திருஞானசம்பந்தர், சுந்தரர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும், சந்திர பகவான் பூஜித்தும், ஸ்ரீ மஹாவிஷ்ணு தவம் செய்து சுதர்சன சக்கரம் பெற்றதும், அதிகார நந்தி நின்ற நிலையில் இருந்து அருள்பாலிப்பது என பல்வேறு சிறப்புகளைப் பெற்றது இந்தக் கோயில்.
அத்துடன், சித்திரை நட்சத்திரத்துக்குப் பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. மேலும், கண்ணில் உள்ள குறைபாடு தீரவும், தீராத வழக்குகள் விரைவில் தீரவும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும் தாமரை மலர் கொண்டு பூசித்தால், குறைகள் அனைத்தையும் இறைவன் தீர்த்துவைப்பான் என்றும் நம்பப்படுகிறது.
திருப்பணி துவக்க விழாவில் திரளான பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ மணிகண்டேஸ்வரரின் அருளாசி பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் திருப்பணிக்குத் தங்களால் இயன்ற பொருளுதவி கொடுத்து திருப்பணியில் பங்கு பெறலாம்.
தொடர்புக்கு –
கே.ஜவஹர், பரம்பரை அறங்காவலர் – 9994986463.
நால்வர் போற்றாள் போற்றும் மன்றம் – 8056002902, 9391255277, 9444983318, 9940058576, 9884433140.
No comments:
Post a Comment