'மு' தொடங்கும் பழமொழிகள்!1. முகத்துக்கு முகம் கண்ணாடி2. முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?3. முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.4. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா5. முதல் கோணல் முற்றுங் கோணல்6. முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.7. முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.8. முருங்கை பருத்தால் தூணாகுமா?9. முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.10. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
11. முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?12. முன் ஏர் போன வழிப் பின் ஏர்.13. முன்கை நீண்டால் முழங்கை நீளும்.14. முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?15. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?16. முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.17. முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு. 'மா' தொடங்கும் பழமொழிகள்!1. மாடம் இடிந்தால் கூடம்.2. மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?3. மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?4. மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது.5. மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.6. மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.7. மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.8. மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.9. மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.10. மாரடித்த கூலி மடி மேலே.
11. மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.12. மாரி யல்லது காரியம் இல்லை.13. மாவுக்குத் தக்க பணியாரம்.14. மாற்றானுக்கு இடங் கொடேல்.15. மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?16. மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
1. மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
2. மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
3. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
1. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
2. மீ தூண் விரும்பேல்.
மூ' தொடங்கும் பழமொழிகள்!
1. மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
2. மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
1. மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
2. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்
1. மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.
2. மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்
மொழி தப்பினவன் வழி தப்பினவன்
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
No comments:
Post a Comment