குருவியாரே, ரஜினிகாந்த், ‘அட்டகத்தி’ ரஞ்சித் படத்தில் நடிப்பது உண்மையா? (பி.கணேஷ் ராம்குமார், சென்னை)
‘‘இதுபற்றிய அறிவிப்பு முறைப்படி வெளிவரும்’’ என்று டைரக்டர் ரஞ்சித் சூசகமாக தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்!
***
கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படம் எப்போது திரைக்கு வரும்? (வி.கதிரேசன், குமாரபாளையம்)
‘பாபநாசம்’ படம் இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
***
குருவியாரே, திருப்பதி ஏழுமலையானை பற்றி புதிதாக தயாராகி வரும் பக்தி படத்தின் பெயர் என்ன? (ஜி.மணிவண்ணன், திருவனந்தபுரம்)
‘ஸ்ரீபாலாஜி மகிமை!’
***
நயன்தாராவுக்கும், எமிஜாக்சனுக்கும் இடையே சண்டையாமே...இருவருக்கும் சண்டை ஏற்படுவதற்கு காரணம் என்ன? (கே.முபாரக் அலி, மேட்டுப்பாளையம்)
தொழில் போட்டிதான்! நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படத்தில் இன்னொரு கதாநாயகி இருந்தால், அவர் உஷாராகி விடுகிறார். படத்தில் தனக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்று சந்தேகப்படுகிறார். இந்த சந்தேகத்தின் வெளிப்பாடுதான் நயன்–எமி இடையேயான சண்டை!
***
குருவியாரே, பிரபுதேவா இப்போது எந்த நடிகையை காதலித்து வருகிறார்? (கே.பாண்டியராஜன், கம்பம்)
பிரபுதேவாவின் காதல் இப்போது இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா பக்கம் திரும்பியிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது!
***
ராய் லட்சுமி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறாரே...அவருக்கு எத்தனை வயதாகிறது? (எஸ்.ராகுல், திருப்பத்தூர்)
இதே கேள்வியை ராய் லட்சுமியிடம் குருவியார் கேட்டபோது, ‘‘எனக்கு என்றும் பதினாறுதான்’’ என்று கூறி, சிரித்தார்!
***
குருவியாரே, விஜய் மில்டன் இயக்கி வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் சமந்தா என்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்? (சு.ரஞ்சித், கொழிஞ்சாம்பாறை)
சமந்தா இதுவரை நடித்திராத ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல். அது என்ன கதாபாத்திரம் என்பதை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறார்கள்!
***
‘சிறுத்தை’ ஷிவா இயக்க, அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறாரே...இனி ஒரு படத்தில் இவர், அவருக்கு ஜோடியாக நடிக்க முடியுமா? (ஆர்.வின்சென்ட், ஊத்துக்குளி)
தங்கையாக நடித்தவர், ஜோடியாக நடிக்க கூடாது என்று சினிமாவில் எந்த சட்டமும் இல்லை. ‘பாசமலர்’ படத்தில் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்த சாவித்ரி, அதன்பிறகு வந்த பல படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்!
***
குருவியாரே, ‘களவாணி’ படத்தில் ஜோடியாக நடித்த விமல்–ஓவியா இடையே இன்னும் காதல் தொடர்வதாக பேசப்படுகிறதே...அது உண்மையா? (ரா.ஸ்ரீதர்ராஜன், அருப்புக்கோட்டை)
ஓவியாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தால், அந்த படத்துக்கு ‘பைனான்ஸ்’ செய்வதாக விமல் கூறுவதாக கூட பேசப்படுகிறது. நெருப்பு இல்லாமல், புகையாது!
***
மணிரத்னம் இயக்கி வெளிவந்த ‘ஓ காதல் கண்மணி’ வசூல் ரீதியாக வெற்றி படமா, தோல்வி படமா? (எம்.இன்பராஜ், நாகர்கோவில்)
‘ஓ காதல் கண்மணி’ படத்தில் போட்ட காசு வந்து விட்டதாக வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்!
***
குருவியாரே, அஞ்சலி தனிமையில் வசிக்கிறாரே...அவர் ஏன் யாரையாவது திருமணம் செய்து கொள்ளக் கூடாது? (பி.சுசீந்திரன், மன்னார்குடி)
யாரும் இதுவரை வசமாக மாட்டவில்லையாம்! மாட்டினால், உடனே கழுத்தை நீட்டி விடுவாராம்!
***
அர்ஜுன், விஷால், ஆர்யா ஆகிய மூன்று பேரும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா? (கே.ஆர்.ஜெயந்தன், சமயபுரம்)
மூன்று பேரும் வலுவான கூட்டணிதான். அவர்களுக்கு பொருத்தமான கதை, டைரக்டர், தயாரிப்பாளர் கிடைத்தால், உங்கள் ஆசை நிறைவேறும்!
***
குருவியாரே, பழைய கதாநாயகிகள் அம்பிகா, ராதா இருவருக்கும் சொத்து தகராறு என்கிறார்களே, அது உண்மையா? (மா.செந்தில்குமார், திருக்குறுங்குடி)
உண்மைதான் என்று ஏ.ஆர்.எஸ். கார்டன் வட்டாரம் சொல்கிறது. பாகப்பிரிவினை நடப்பதாக பரவலாக பேசப்படுகிறது!
***
கவுண்டமணி இப்போது எத்தனை படங்களில் நடித்து வருகிறார், என்னென்ன படங்கள்? (ஆர்.செல்வா, புதுச்சேரி)
வாய்மை, 49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய மூன்று படங்களில் கவுண்டமணி நடித்து வருகிறார்!
***
குருவியாரே, இளையராஜா எத்தனை முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார், அவர் இசையமைத்த எந்தெந்த படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன? (வி.பி.ஷண்முகானந்த், விருத்தாசலம்)
இளையராஜாவுக்கு சிந்து பைரவி (தமிழ்), சாகர சங்கமம் (தெலுங்கு), ருத்ரவீணா (கன்னடம்) ஆகிய மூன்று படங்களுக்காக தேசிய விருதுகள் கிடைத்துள்ளன!
***
கார்த்தி நடிக்கும் படத்துக்கு, ‘காஸ்மோரா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்களே...காஸ்மோரா என்பது பேயின் பெயரை குறிக்கிறதா என்ன? அந்த படத்தில் பேயாக நடிப்பவர் யார்? (சி.பத்மநாபன், அம்பாசமுத்திரம்)
‘காஸ்மோரா’ என்றால், அரசனுக்கு இணையானவர் என்று அர்த்தமாம். அந்த படத்தில் பேயாக நடிப்பவர், நயன்தாரா!
***
குருவியாரே, ‘கங்காரு’ படத்தில், ‘‘என் ஏத்தத்துக்கும் இறக்கத்துக்கும் என்ன குறை?’’ என்று பாடல் காட்சியில் கவர்ச்சிகரமாக ஏற்ற இறக்கத்துடன் நடித்துள்ள வர்ஷா, எந்த ஊரை சேர்ந்தவர்? ஆந்திராவா, கேரளாவா? (டி.மோகன், சங்ககிரி)
ஆந்திராவும் இல்லை; கேரளாவும் இல்லை. வர்ஷாவின் சொந்த ஊர், கொல்கத்தா!
***
ஆண்ட்ரியாவின் காதல் வலையில் சிக்கிய கதாநாயகன் யார்? (கே.ராஜேஷ்வரன், வேலூர்)
பகத் பாசில். நடிகை நஸ்ரியாவின் கணவர். இவரையும், ஆண்ட்ரியாவையும் இணைத்து மலையாள பட உலகில் கிசுகிசு பரவியிருக்கிறது!
***
குருவியாரே, பெரிய திரையில் வரும் சில கதாநாயகிகளை விட, சின்னத்திரையில் வரும் அம்மா நடிகைகள் அழகாக இருக்கிறார்களே...? (ஏ.ஆனந்த், காவேரிப்பட்டினம்)
குடும்பப்பாங்கும், முக வசீகரமும் உள்ளவர்கள் மட்டுமே சின்னத்திரை நடிகைகளாக தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரிய திரையில், அந்த விதிமுறைகள் எதுவும் இல்லாததே இதற்கு காரணம் என்கிறார்கள்!
***
செல்வராகவன் இயக்கும் புது படத்தில் இருந்து திரிஷா விலகியது ஏன்? (ஆர்.சி.சார்லஸ், பூந்தமல்லி)
அந்த படத்துக்கு வருண் மணியன் ‘பைனான்ஸ்’ செய்திருக்கிறாராம்!

No comments:
Post a Comment