வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

நம் ஊரில் மழை பெய்யும்
போது இடி இடித்தால் போதும்.
அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள்
பெரியவர்கள். உடனே, நம் வீட்டு இளசுகள்,
நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன்
வில்லையும் அம்பையும்
எடுத்துகிட்டு வந்து,
இடி சத்தமே இல்லாம பண்ணிட
போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.
இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வ
அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும்
அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே
என்று இடியிலிருந்து தப்பும்
அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச்
சொல்வார்கள்.உண்மையில், உண்மையான
அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும் போது,
சிலரது காது அடைத்து ஙொய்ங்
என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப
அர்ஜுனா என்றால் போதும்.
காது அடைக்காது. அர் என்று சொல்லும்
போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத்
தொடும். ஜு என்னும் போது வாய்
குவிந்து காற்று வெளியேறும்.
னா என்னும் போது, வாய் முழுமையாகத்
திறந்து காற்று வெளியே போகும்.
இப்படி காற்று வெளியேறுவதால்
காது அடைக்காது. அதற்குத்தான்
அர்ஜுனா வை நம்மவர்கள்
துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன்
கிருஷ்ண பக்தன் என்பதால், அவன்
பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம்
என்ற ஆன்மிக காரணத்துடன்,
காது அடைத்து விடக்கூடாது என்ற
அறிவியல் காரணமும் இதில்
புதைந்து கிடக்கிறது. இனிமேல்,
இடி இடித்தால் அர்ஜுனா கோஷம்,
இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்!

No comments:

Post a Comment