வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

மடிக்கணினி (லேப்டாப்)




இப்படி ஒரு கேள்வியை ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்டு சர்வே செய்தது ஒரு ஏஜென்ஸி. இந்த சர்வேயில் பலரும் ‘டிக்’ அடித்து தேர்வு செய்தது லேப்டாப் கம்ப்யூட்டரைத்தான். மடியில் குழந்தை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக லேப்டாப் இருந்தாக வேண்டும் என்று நினைக்கிற நிலை இன்றைக்கு!நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அலுவலக வேலையைச் செய்து கொள்ளும் வசதி; மெயில்கள், மார்க்கெட்டின் லேட்டஸ்ட் ஏற்றயிறக்கங்கள், ரயில், விமானம் போன்றவை குறித்த தகவல்கள் என உங்களிடம் ஒரு லேப்டாப் இருந்தால் விரல் சொடுக்கும் நேரத்தில் அத்தனையும் செய்து முடித்துவிடலாம். இதனால்தான் எல்லோரும் அதை வாங்கத் துடிக்கிறார்கள்.

கன்ஸ்யூமர் லேப்டாப்பில் இன்ஸ்பிரேஷன், ஸ்டூடியோ, வெப் கேமிரா போன்ற அம்சங்கள் இருக்கிறது. நான்கு மணி நேரத்திற்கு இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஃபேன்ஸியாகவும் இருக்கும். இல்லத்தரசிகள், படிக்கும் குழந்தைகள், வீட்டிலிருந்தபடி பங்குச் சந்தை முதலீடு செய்பவர்கள் போன்றோர்களுக்கு கன்ஸ்யூமர் லேப்டாப் மிகச் சரியானது.
கமர்ஷியல் லேப்டாப்களை பத்து மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதிகம் சூடாகாது. மிக வேகமாகவும், அதே நேரத்தில் நாம் அதில் பதிந்து வைக்கும் டேட்டாக்கள் பாதுகாப்பாகவும் இருக்கும். அதிக ஸ்டோரேஜ், 4 ஜி.பி. ராம் என பல வசதிகள் இருக்கிற இந்த லேப்டாப் கல்லூரி மாணவர்கள் புராஜெக்ட் செய்ய, பிஸினஸ்மேன்கள் அதிக சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்யப் பயன்படும். அதிக வசதிகள் கொண்ட இது கன்ஸ்யூமர் லேப்டாப்பைவிட வெறும் 3,000 ரூபாய் அதிகமாகும்.

பேட்டரியைப் பொறுத்தவரை ‘நயன்செல்’ பேட்டரி கேட்டு வாங்கணும். இந்த பேட்டரியை பயன்படுத்தினால் ஆறு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். இதுவே  ‘சிக்ஸல்’ பேட்டரி எனில் நான்கு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பேட்டரியே உங்கள் லேப்டாப்புக்குத் தேவை.
அனைத்து நிறுவனங்களும் லேப்டாப்களுக்கு ஒரு வருட வாரன்டி காலம் கொடுக்கின்றன. கமர்ஷியல் லேப்டாப் எனில் மூன்று வருடம் வரைகூட வாரன்டி கொடுக்கிறார்கள். அதற்கு மேலும் கூடுதலாக வாரன்டி தேவைப்பட்டால் அந்த நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம். டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தக் கூடுதல் வாரன்டியை நீங்கள்  ஆன்லைன் மூலமாகத்தான் பெற முடியும். இதற்கு 5,000 கட்ட வேண்டியது இருக்குமாம். லெனோவா, ஹெச்.பி. போன்ற நிறுவனங்களில் பணமாகக் கொடுத்தால் பத்து நாட்களில் கூடுதல் வாரன்டி கிடைக்கும்.
லேப்டாப்களைப் பொறுத்தவரை ‘ஆன்சைட் வாரன்டி’ மற்றும் ‘கேரியிங் வாரன்டி’ என இரண்டு விதமான சர்வீஸ்கள் உண்டு. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல் அல்லாமல் லேப்டாப் என்பது கையில் தூக்கிக் கொண்டு செல்லக் கூடிய பொருள் என்பதால்தான் இப்படி இரண்டு விதமான சர்வீஸ்கள். ‘ஆன்சைட்’ என்பது சர்வீஸ் ஆட்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் சரி செய்வார்கள். ‘கேரியிங்’ என்பது நாம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று அங்கு ரிப்பேரை சரி செய்து கொள்வது.

பொதுவாக லேப்டாப் வாங்கும்போது பேக், சார்ஜர், பேட்டரி போன்றவைகளை கண்டிப்பாகக் கொடுப்பார்கள். இது போக கூடுதல் உதிரிப் பாகங்கள் தேவைப்பட்டால் அதை நாம்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும்போது அதிகமான வெப்பம் வெளியேறும். இது உடலுக்கு நல்லதல்ல. இதனைத் தவிர்க்க ‘கூலிங் பேட்’ வாங்கிக் கொள்வது நல்லது. இதன் விலை சுமார் 1,550.


No comments:

Post a Comment