வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

இண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100


1970-களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. 90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது. இதன் நீட்சியாக… ‘வீட்டுக்கு ஒரு மரம்’ என்று சொல்லப்படுவது போல்… ‘வீட்டுக்கு ஒரு கணினி’ என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போயுள்ளது இந்த 2010-ல்!
மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையவலை, கிட்டத்தட்ட உலகத்தையே வளைத்துப் போட்டுவிட்டது. அதை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏணிப்படியாக, அறிவை வளர்ப்பதற்கான என்சைக்ளோபீடியாவாக என்று பலவாறு நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம், அழிவைத் தேடிக்கொள்ளும் ஆபத்தும் அதில் அதிகமிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்… அது எப்படி பயன்படப் போகிறது என்பதெல்லாம் நம் கைகளில்தான் இருக்கிறது.
1. கணினி பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு மென்பொருளை வாங்குவதற்கு முன், அதன் சோதனைப் பதிப்பை இணையத்திலிருந்து பதிவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். ஒரு மாத காலம் வரை இயக்கத்திலிருக்கும் சோதனைப் பதிப்பு மூலம் அந்த மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். சோதனைப் பதிப்புகள் முற்றிலும் இலவசம்.
இணைய இணைப்பு கொடுக்கும் பயனாளர்களில் 57% பேர் முதலில் தேடல் பொறிகளைத்தான் திறக்கின்றனர்; உலகம் முழுவதும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோரில் 93% பேர் தேடல் பொறிகளின் மூலம்தான் பொருட்களை வாங்குகின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். அந்த ‘ஸர்ச் இன்ஜின்’களை திறமையாகப் பயன்படுத்துவது எப்படி..? படியுங்கள்…
6. இணையத்தின் ‘டாப் ஒன்’ தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, ‘கூகுள்’தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. ‘1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்’ என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
சராசரியாக இளைஞர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் கம்ப்யூட்டர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இளைஞர்கள் மட்டுமல்ல… உறவுகள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகள், வியாபாரிகள், தொழில் துறையினர், அரசியல்வாதிகள் என்று அனைத்து தரப்பினரும் மின்னஞ்சல் மூலமாக மில்லி செகண்டில் தாங்கள் விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மின்னஞ்சலை அனுப்பும்போது சில ‘கவனிக்க’ சங்கதிகள் இங்கே…
20. நண்பரிடமிருந்து உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் தேவை. ‘ஃபார்வேர்ட்’ (Forward) பட்டன் அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன், அந்த மின்னஞ்சலில் நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி எண் இருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். வீண் சிக்கலுக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.
33. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கியமான மென்பொருள் தொகுப்புகளின் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், இணைய தளத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் மைக்ரோசாஃப்டின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிடுவீர்கள்.
37. இணைய இணைப்பைத் துண்டிப்பதற்கு முன், நீங்கள் பிரவுசிங் செய்த தடயங்களை நீக்கிவிடுங்கள். அதாவது, பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக கோப்புகள், குக்கீஸ்களை அகற்றுங்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர் எனில் Tools => Internet options செல்லுங்கள். ஃபயர்பாக்ஸ் எனில் Tools => clear recent history சென்று அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.
43. சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாது வேறு நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால், நமது சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல் முழுமையாகப் பயன்படுத்தக் கூடும்.
50. நமது கம்ப்யூட்டரில் இருந்து இணையத்தின் மூலம் ஒரு தகவலை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பேருதவி புரிவது போர்ட்கள். ஒரு கம்ப்யூட்டரில் மொத்தம் 65,535 போர்ட்கள் இருக்கும். அவற்றுள் ஒவ்வொரு போர்ட்டும் ஒவ்வொரு இயக்கத்துக்காக என்று பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கும். பிரிக்கப்படாத போர்ட்கள் வழியேதான் ஹேக்கிங் நடக்கும்.
ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்வது, பயணங்கள், திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது, ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துவது, உடை, உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என அனைத்துமே இப்போது ஆன்லைனில் சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படைத் தேவை… ஆன்லைன் வங்கிக் கணக்கு. இனி பார்ப்போம் ஒவ்வொன்றாக…
53. அமர்ந்த இடத்திலிருந்தே உங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கும் ஆன்லைன் வங்கிக் கணக்குப் பக்கத்துக்குச் செல்லும்போது, உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் வங்கிக் கணக்கை இயக்குகிறீர்கள் என்பதை இந்த சின்னம்தான் உறுதி செய்யும்.
55. இப்போது ‘பிஷ்ஷிங்’ (Fishing) என்ற சொல் அனைத்து ஆன்லைன் பயனாளர்களையும், வங்கிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்கிகளின் பெயரில் அச்சு அசலாக அவர்களது இணைய தளத்தின் வடிவமைப்பில் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட் எண், பேங்க் பேலன்ஸ், ஏ.டி.எம். பின் நம்பர் என அனைத்தையும் களவாடுவதுதான் ‘பிஷ்ஷிங்’!
57. இந்த பிஷ்ஷிங்கில் இருந்து எப்படி சுதாரிப்பது? உங்கள் மின்னஞ்சலுக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் பெயரில் அறிவிப்புகள் வரும். அதிலுள்ள இணையதள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று நம் தகவல்களைத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற மின்னஞ்சல்களை அப்படியே அழித்துவிடுங்கள்.
70. சில இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
84 மொபைல் போன்களுக்கும் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உறுதியான பிணைப்பு உண்டு. போன்களுக்குத் தேவையான ரிங் டோன்கள், வண்ண தீம்கள், அனிமேஷன் படங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டருடன் போனை இணைத்துவிட்டு, நேரடியாக இணையத்திலிருந்து போனுக்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்.
91. அடுத்ததாக, மின் பத்திரிகைகள்! இணையத்தின் அசாதாரண வளர்ச்சி காரணமாக, தற்போதுள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அனைத்தும் தங்கள் ஆன்லைன் பதிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. மின் பதிப்புகள் மூலம் தமிழகத்தில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளையும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் படிக்கலாம்.
93. நாளிதழ்கள், பத்திரிகைகள் மட்டுமல்லாது, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணைய தளங்கள் உள்ளன. குறிப்பாக, மற்ற மொழிகளில் இல்லாத அளவுக்கும், தமிழில் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், நாளிதழ்களைவிட மிக வேகமாக, உடனுக்குடன் செய்திகளை புதுப்பித்துத் தருவதில் இணையதளங்கள் தனித்து நிற்கின்றன.


97 வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி மேற்படிப்புகளுக்கு உதவிபுரியும் ஏராளமான இணையதளங்களும் ஆன்லைனில் உலவுகின்றன. நிபுணர்களின் ஆலோசனைகள், கல்வி அறிஞர்களின் வழிகாட்டுதல்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பீடுகள் என, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழிகாட்டியாக இந்த இணைய தளங்கள் செயல்படுகின்றன.

யுரேகா… யுரேகா…
ல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கிரேக்க அறிவியல் அறிஞர் ஆர்க்கிமெடீஸ், அந்தச் சமயத்தில் சொன்ன வார்த்தைகள்… ‘யுரேகா… யுரேகா’ (கண்டுபிடித்துவிட்டேன்… கண்டுபிடித்துவிட்டேன்). ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னும் அந்தக் குரல் ஓயவில்லை. தினம் தினம் உலகம் முழுக்க புதிது புதிதாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் கம்ப்யூட்டர் விஷயத்தில் நிமிடங்களுக்கு ஒன்றாகக் கூட புது விஷயங்கள் முளைக்கின்றன. பல முனைகளில், பலதரப்பட்டவர்களும் மூளையைக் கசக்கிக் கொண்டு உழைப்பதால் நிகழும் அற்புதம் அது! அப்படிப்பட்ட அற்புதம் மற்றும் அதை உருவாக்கியவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் ஆங்காங்கே இடம் பிடிக்கின்றன இந்த சின்ன புத்தகத்தில்…!

ங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர்… கம்ப்யூட்டர்…! இந்த அதிசயக் கருவியை கண்டுபிடித்த பிதாமகன் யார்?
‘டிஃபரன்ஸ் இன்ஜின்’ என்பதுதான் முதல் கம்ப்யூட்டர். இந்த கான்செப்டை 1786-ம் ஆண்டில் உருவாக்கியவர் ஜெ.ஹெச்.முல்லர். அதன் பிறகு, அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்கள். ஆனால், அதே கான்செப்டை கையிலெடுத்து, 1822-ம் ஆண்டில் கட்டமைத்தார் ‘சார்லஸ் பாப்பேஜ்’. இவரைத்தான், ‘கம்ப்யூட்டரின் தந்தை’ என்கிறார்கள். இவர் கட்டமைத்த கம்ப்யூட்டர், கால ஓட்டத்தில் பல்வேறு நிபுணர்களின் கை வண்ணத்தால், பல பரிணாமங்களைக் கண்டு… இப்போது நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் வரை வந்து நிற்கிறது.

ன்டெர்நெட்டை யார் கண்டுபிடித்தார்கள்?
முதன் முதலாக 1961-ல் இதனை உருவாக்கியவர் லியோநார்டு க்ளெய்ன்ராக் (Leonard Kleinrock) என்பவர். 1962-ல் ஜெ.சி.ஆர். லிக்லிடெர் என்பவர், லியேநார்டுடன் இணைந்து புது வலைதள ஐடியாவை உருவாக்கி, ARPANET என்று பெயரிட்டார். 1968-ல் ‘நெட்வொர்க் வொர்க்கிங் குரூப்’ என்ற நிறுவனம் இதனை இன்னும் நெறிப்படுத்தியது. 1969-ல் ‘யு.சி.எல்.ஏ.’ என்ற நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இன்டெர்நெட்டை அறிமுகப்படுத்தியது.

மெயில் அனுப்புவது என்றாலே… ஒரு காலத்தில் அது ‘யாஹ”‘ என்பதாகத்தான் இருந்தது. 1990-களில் சி.வி. எனப்படும் ‘கரிகுலம் வீட்டாய்’ எழுதும்போது ‘யாஹ”‘ மெயில் ஐடி இருப்பதை கௌரவமாகக் குறிப்பிடுவார்கள். அதன் பிறகுதான் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அத்தகைய பெருமைக்குரிய யாஹ” நிறுவனத்தை நிறுவியவர்கள்… ஜெரி யாங், டேவிட் ஃபிலோ ஆகியோர்தான்.

‘கூகுள்’ என்ற ஸர்ச் இன்ஜினுக்குள் (Search engine) நுழைந்து, வெண்டைக்காய் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத் தகவல்களையும் பெற முடிவது எப்படி? 1996-ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து லேரி பேஜ், செர்கே பிரின் என்ற இருவர், ‘ஸர்ச் இன்ஜின்’ எனும் தேடு தளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அதில் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட பெயர், பல ஆயிரம் முறை பதிவாகியுள்ளதைக் கண்டுபிடித்தனர். அதுவரை அந்த நிறுவனம் ஒரு கம்பெனியாக முறையாக பதிவு செய்யப்படவில்லை. 1998, செப்டம்பர் 7-ம் தேதி அந்தக் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அதுதான் இன்றைக்கு உலகின் நெம்பர் ஒன் தேடுபொறி தளமாக இருக்கும் கூகுள்!

‘ஆர்குட்’ எனப்படும் சோஷியல் நெட்வொர்க் முதலில் புழக்கத்துக்கு வந்தது… 2004 ஜனவரியில். உருவாக்கிய ‘ஆர்குட்’ பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டுக்குள் இதை அதிகம் பயன்படுத்தியவர்கள் அமெரிக்கர்கள்தான். அதன் புகழ் பரவியதும்… பிரேஸில்காரர்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்போது இந்தியா அந்த வரிசையில் நிற்கிறது. அமெரிக்கர்களோ… வேறு சைட்டுக்கு தாவி விட்டார்கள்.

ண்ணுக்குத் தெரியாத ‘செல்’ தொடங்கி, காணவே முடியாத ‘அண்டம்’ வரை உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக தகவல்களை நிரப்பி வைத்திருக்கும் விக்கிபீடியா… ஓர் ஆச்சரிய என்சைக்ளேபீடியா. ‘ஜிம்போ’ என்றழைக்கப்படும் ஜிம்மி டோனல் (Jimmy Donal) என்ற அமெரிக்கர்தான் இந்த விக்கிபீடியாவை நிறுவியவர்.

ம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் லேட்டஸ்ட்டாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருப்பவர் பிரணவ் மிஸ்ட்ரி எனும் இந்தியர். இவர் சொல்ல ஆரம்பித்திருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ எனும் டெக்னாலஜி… பிரமிப்பின் உச்சிக்கே செல்ல வைக்கிறது. ‘மானிட்டர் தேவையில்லை, சி.பி.யு. தேவையில்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் உண்டு. அதுவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உண்டு’ என்கிறார். தீப்பெட்டி மற்றும் மேளக்காரரின் கை விரல் முனைகளில் இருக்கும் உறை ஆகியவை போல சின்னஞ்சிறு கருவிகள் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டே… போட்டோ எடுக்கிறார், கட் அண்ட் பேஸ்ட் செய்கிறார், புத்தகத்தில் இருப்பதை காப்பி செய்கிறார். இந்தக் கம்ப்யூட்டருக்கு…. சுவர், பேப்பர், கைகள், சட்டை, சோபா… இப்படி எல்லாமே மானிட்டர்கள்தான்!

No comments:

Post a Comment