மனிதனின் உடல் அதிசயங்கள் நிறைந்தது. ஒரு வருடத்தில் நமது கல்லீரல் 23 லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. உடலில் கனமான உறுப்பு மூளைதான். இதன் எடை சுமார் ஒன்றே கால் கிலோ இருக்கும். உடலில் 60 சதவீதம் நீர்தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும்.
இதயம் 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தக் குழாய்களின் வழியே பாயச் செய்கிறது. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடையுள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி தூக்கப் போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.
மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் வளர்ச்சியையும் பாலினத் தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு பட்டாணி அளவே உள்ள இது உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.
ஒரு மனிதன் 25 வயதில் முழு வளர்ச்சி பெற்று விடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்று விடுவது மட்டுமல்லாமல், மெதுவாகக் குறையவும் தொடங்கும். பத்து ஆண்டுகளில் பத்தில் நான்கு அங்குலம் என்ற அளவில் உயரம் குறையத் தொடங்கும். இது குருத்தெலும்புகள் காய்ந்து போவதால் நேருகிறது.
நாம் பகலை விட இரவில்தான் அதிகமாக வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழை காலத்தை விட அதிகமாக வளர்கிறார்கள். ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்போது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது. உறங்கும்போதுகூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தைப் பாய்ச்சுகிறது.
வளர்ச்சி அடைந்த ஆண் ஓய்வாக இருக்கும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையான வளர்ச்சி அடைந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை நாடித் துடிப்பு இருக்கும். கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பையே குறிக் கும்.
பகலில் உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும்போதும், நிற்கும்போதும் முதுகிலுள்ள குருத்தெலும்பு அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும்போது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.
சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். கருத்த முடி உடையவர்களுக்குக் கூடுதலாக இருக்கும். உதடு, உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. குழந்தை பிறக்கும்போது 300 எலும்புகள் இருக்கும். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு எதுவென்றால் அது சருமம்தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே ஒரு பெண் என்றால் 17 சதுர அடிதான் இருக்கும்.
எடையைத் தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லைவிட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு ஒன்பது டன் எடையைத் தாங்கும். அதாவது கருங்கல்லைப் போல நான்கு மடங்கு அதிகம்.

No comments:
Post a Comment