
-
அப்படியா?
-
கோகோ கோலா பானம், 1886ஆம் ஆண்டில்
டாக்டர் ஜான் பெம்பரட்ன் என்பவரால் கண்டு
பிடிக்கப்பட்டது.
-
அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நூறுஆயிரம்
என்பார்கள்.
-
ஆசிரியர்கள், மாணவர்கள் எதிரிலும், டாக்டர்கள்,
நோயாளிகள் எதிரிலும் புகைப்பிடிக்கக் கூடாது
என்று சட்டம் உள்ள நாடு ரஷ்யா
-
ஸ்நூக்கர் விளையாட்டில் 22 பந்துகள் பயன்படுத்தப்
படுகின்றன.
-
ஆயிரம் ஆண்டுகளாக "பாப்கார்ன்' உலகில் இருந்து
வருகிறது.
-
ஜப்பான்நாட்டு தேசிய கீதம் நான்கே வரிகளையும்,
கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளையும் கொண்டது.
உலகின் மிகச் சிறிய மற்றும் மிகப் பெரிய தேசிய
கீதங்கள் இவையே!
-
மனிதர்களுக்கு மூக்கு, காது வளர்ச்சி அடையும்.
ஆனால் கண்கள் மட்டும் ஒரே அளவே இருக்கும்.
-
மனிதருள் மாணிக்கம் நேருஜி சிறையில் இருந்த
போது தன் மகள் அன்னை இந்திராவிற்கு எழுதிய
கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? 930
-
பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பழம் மாம்பழம்.
-
வீடியோ என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு
"நான் பார்க்கிறேன்' என்று பொருள்.
-
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பள்ளிச்
சீருடைகளின் வண்ணம் என்ன தெரியுமா?
நீலமும், வெள்ளையும்தான்.
-
தெருவின் பெயர்கள்
-
கடுகுத் தெரு, மிளகாய்த் தெரு, வாழைக்காய் தெரு,
கத்திரிக்காய் தெரு, இவையெல்லாம் நெய்வேலி நகரில்
உள்ள சில தெருக்களின் பெயர்கள்.
-
"ஐந்து வர்ணத் தெரு' என்பது சில ஊர்களில்
காணப்படும் தெருக்களில் ஒன்று. குலசேகரன் பட்டினம்,
பாண்டியர் காலத்தில் புகழ்பெற்ற ஊராக விளங்கியுள்ளது.
சிறிய துறைமுகப் பட்டினமாகவும் இருந்துள்ளது.
ஐந்து வர்ணத்தார் என்பது நவரத்தினக் கற்களை வணிகம்
செய்யும் வணிகர்களைக் குறிக்கும் சொல்லாகும்.
இவர்கள் வசித்த பகுதி ஐந்து வர்ணத் தெரு எனப்படுகிறது.
-
"பரிமார் தெரு' என்பது சிதம்பரனார் மாவட்டம்,
காயல் பட்டினத்தில் அமைந்துள்ள தெருப் பெயராகும்.
பரி என்பது குதிரையைக் குறிக்கும் சொல்லாகும்.
பண்டைய காலத்தில் இரு சிறிய துறைமுகமாகவும்
இருந்துள்ளது. அரபுநாடுகளில் இருந்து குதிரைகளைக்
கொண்டுவந்து வணிகம் செய்த வணிகர்கள் தங்கியிருந்த
பகுதியாக விளங்கியுள்ளது.
இங்கு குதிரை லாயம் அமைத்து வணிகம் செய்துள்ளனர்.
எனவே இத்தெரு பரிமார் தெரு என்று இன்றும் அழைக்கப்
படுகிறது.
No comments:
Post a Comment