வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ்7

ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் ‘பில்’லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.
ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள், கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.
 கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், ‘குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், ‘குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்’ என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.
 பொருட்களை வாங்கும்போது ‘கியாரண்டி கார்ட்’ பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.
 வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ”ஸாரி… ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க” என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.
 ‘இப்போது புதிய கைப்பிடியுடன்…’, ‘இப்போது புதிய ஸ்பீக்கருடன்…’ இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்… பர்ஸூக்குத்தான் ஆபத்து.
. ‘பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு’ என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்… நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை!
 ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்!
 நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க், தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.
 தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது, பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்… நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்!
 ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.
 வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்… அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.

No comments:

Post a Comment