ஏ.சி. வாங்குவோர் கவனிக்கவும்
!உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப, ஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல், விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்… அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோல, சிறிய அறைக்கு, குறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால், அறை விரைவில் குளிர்ந்து, அவஸ்தையைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.
அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டு, ஃபால்ஸ் சீலிங் உண்டா, அறைக்கு மேல் மொட்டை மாடியா… போன்ற பல விஷயங்களை அலசி உங்கள் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.
‘ஃபில்ட்டர்’களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.
‘எனர்ஜி சேவர்’ என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். ‘எனர்ஜி ஸ்டார்’ அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.
ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல ‘டைமர்’ உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்… அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.
விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.
ஏ.சி. மெஷினுக்கு ‘வருட சர்வீஸ்’ வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.
66. நீளமான வராண்டா போன்ற அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, ‘டர்போ ஆப்ஷன்’ உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.
ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்… பெரும்பாலான பொருட்கள் ‘சீஸன்’ முடிந்தபின்பு வாங்குவது, குறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.
No comments:
Post a Comment