வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

பி.எஸ்.எல்.வி. சி-32 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது


சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 5 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.

இப்போது 1,425 கிலோ எடை கொண்ட 6-வது செயற்கைகோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எப்யை பி.எஸ்.எல்.வி. சி-32 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுமையத்தில் இருந்து  இன்று மாலை 4.01 மணிக்கு விண்ணில் செலுத்தபட்டது. இந்த செயற்கைகோள் திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்று  வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. முன்னதாக இந்த ராக்கெட் விண்வெளி குப்பைகள் குறுக்கிடலாம் என்பதால், ஒரு நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.

 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள  ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எப் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 12 ஆண்டுகளாகும்.இதன்மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். 

No comments:

Post a Comment