இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் அனுப்பியது
பT
பாட்னா,
பீகார் மாநிலத்தில் கோர்ட்டில் ஆஜராக கோரி இந்து கடவுள் ஆஞ்சநேயருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பிஉள்ளது.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் தெக்ரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிராக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசின் பொதுப்பணித்துறை புகார் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து மாஜிஸ்திரேட் கோர்ட்டு, இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிஉள்ளது. கோர்ட்டு அனுப்பிய சம்மனின் நகலானது, ஆஞ்சநேயர் சிலையில் தொங்கவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிஉள்ளது.
நீதிமன்றங்களில் பல வினோத வழக்குகள் அவ்வப்போது தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும், தள்ளுபடிக்கும் உள்ளான சம்பவங்களை நாம் பார்த்துவருகிறோம். சமீபத்தில் சீதையை கைவிட்டதாக இந்து கடவுள் ராமர் மீது கூட வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சமீபத்தில் சத்தீஸ்கரில் நீதிபதி ஒருவரின் தோட்டத்தில் மேயந்த வெள்ளாடு, அதன் உரிமையாளருடன் கைது செய்யப்பட்டது. பின்னர் ஆடும், அதன் உரிமையாளரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
க
No comments:
Post a Comment