இளம் காதலர்களிடையே பெரும் வரவேறப் பெற்றும் வரும் காதலர் தினம் குறித்து ‘ஸ்கொட்டிஷோர்பிட்’ நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
காதலர் தினப்பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், கருக்கலைப்பு நிலையம் மற்றும் வைத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் மூலம் இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9,400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், காதலர் தினத்தில் 4500 ரூபாவுக்குட்பட்ட அறைகளில் 80 சதவீதம் காதல் ஜோடிகளுக்காக முன்பதிவு செய்துகொள்ளப்படுவதாகவும் ‘ஸ்கொட்டிஷோர்பிட்’ நிறுவன ஆய்வறிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: - காதலர் தின கொண்ட்டாட்ட நாளில் குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்களின் விற்பனை இரு மடங்காக அதிகரிக்கிறது. காதலர் தினத்தை அடுத்து வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் ஏராளமான யுவதிகள் கருக்கலைப்பு செய்துகொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
காதலர் தினத்தில் காதலர்களுக்கிடையில் பரிமாறிக்கொள்ளும் சிறந்த பரிசு பாலியல் ரீதியிலான உறவு என்ற எண்ணக்கருவை தற்கால இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் பரப்பி வருகின்றன.
No comments:
Post a Comment