இலவச ஹைக் ”குரூப் காலிங்” வசதி அறிமுகம்…!
பார்தி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் அவர்களின் மகன் கவின் மிட்டல் நிர்வகிக்கும் ”ஹைக் மெசஞ்சர்” நிறுவனம், 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் தன் சேவையைத் தொடங்கியது. ஹைக் சேவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், ”வாட்ஸ் அப்” அளவுக்கு மக்களை கவரவில்லை.
கடந்த வருடம் இணைய வழியில் தொலைபேசி இணைப்பினைத் தர ஹைக் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் இணையம் மூலம் குரூப் காலிங் செய்யும் சேவையைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குரூப் காலிங் சேவை 4G மற்றும் வைஃபை இணைப்புகளில் மட்டும்தான் செயல்படும். 3G,2G பயன்படுத்துபவர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.
இது குறித்து கவின் மிட்டல் கூறியதாவது :
குரூப் காலிங் செய்வது இவ்வளவு எளிமையாக இதுவரை இருந்ததில்லை ,மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் கலந்துரையாடவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் .
தற்போது ஹைக் பயன்படுத்துபவர்கள் இந்த புதிய வசதியை ஏற்கனவே உள்ள ஹைக் பதிப்பை அப்கிரேட் செய்து பயன்படுத்தலாம். தற்போது ஹைக் பயனர்களின் எண்ணிக்கை 35 மில்லியனாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment