தேவையான பொருட்கள்:
மூங்கில் அரிசி - 1 கப்,
பால் - 4 கப், வெல்லப்பொடி - ஒன்றரை கப்,
முந்திரி பருப்பு - 12 ஏலக்காய்ப் பொடி - 1 தே. கரண்டி,
நெய் - 2 மேஜைக் கரண்டி.
-
செய்முறை:
மூங்கில் அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நொய் ஆக்கிக்
கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு அதில் நொய்யை
போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேக
வைக்கவும். பின்னர் வெல்லத்தை நன்றாகக் கரைத்து,
வடிகட்டி சேர்த்துக் கலக்கவும். கொதிக்கும்போது பால் சேர்த்து
நன்றாகக் கலக்கவும். பாயசம் பதம் வரும் போது ஏலக்காய்ப்
பொடி, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.
இப்போது சுவையான மூங்கில் அரிசிப் பாயசம் தயார்!
-
--------------------------------------
- தென்றல் மதுசூதனன்
மங்கையர் மலர்
No comments:
Post a Comment