வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

மாத்தி யோசி

எது உண்மைக் காதல் - மாத்தி யோசி









ஆனந்தும், சுந்தரும் கல்லூரி தோழர்கள். ஆனந்துக்கு காதல்
என்றால் எல்லையில்லா ஆனந்தம். சுந்தருக்கோ இந்த வார்த்தை சுத்தமாக
பிடிக்காது. சுந்தரை சந்திக்கும் போதெல்லாம் ஆனந்த், தன்னுடைய காதல்
குறித்து மகிழ்ந்து பேசுவான். மச்சான், ‘மிருதுளா என் தேவதை. அந்தி சாயும்
அந்த மாலைப் பொழுதில், அர்த்தனாரீஸ்வரர் கோயில் வாசலில் அவளை பார்த்த அந்த
நாளை, எந்த நாளும் என்னால் மறக்க முடியாது. அவள் மட்டும் என் அருகில்
இருந்தால் போதும். இந்த பூமியில் வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. 

என்
உயிருக்கு மேலாக அவளை நேசிக்கிறேன்.’’ இது சுந்தரை பார்க்கும் போதெல்லாம்
ஆனந்தின் உதடுகளிலிருந்து உணர்ச்சி பெருக்கோடு வெளியேறும் வார்த்தைகள்.
ஆனந்தின் காதல் பேச்சுக்கு சுந்தர் எப்போதுமே செவி சாய்ப்பதில்லை. சில
நேரங்களில் கடுப்பாகும் ஆனந்த், ‘‘காதல் என்றால் என்னவென்று தெரியாத
நீயெல்லாம் ஒரு மனுசன், உங்கிட்ட போய் என் காதல் கதையை சொன்னேன் பார்’’
என்று சுந்தரிடம் அலுத்துக் கொள்வான். அன்றைய தினம் அதிகாலை நேரத்தில்
வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் சுந்தர்.

கதவை யாரோ
தட்டும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தான். அதற்குள் அவனது தாயார்
சுப்புலட்சுமி வந்து கதவை திறந்து விட்டாள். விடிந்தும் விடியாத அந்த
நேரத்தில் மூக்கு முட்டும் போதையில் வந்திருந்தான் ஆனந்த். தாயாரை
சமாளித்து சுதாரித்துக் கொண்ட சுந்தர், ‘மாப்ள என்ன பிரச்சினை? விடியகாலம்
ஏண்டா இப்படி வந்து நிக்கிற?’ என்று ஆனந்திடம் கேட்டான். ‘கண்களில்
நீர்முட்ட ஆனந்த் சொன்னான். ‘மாப்ள மிருதுளா என்னை ஏமாத்திட்டா. அவங்க அப்ப
பார்த்த பையனை கட்டிக்க சம்மதிச்சுட்டாளாம்.

உண்மைக் காதலுக்கு
மரியாதை இல்லாம போச்சுடா. எனக்கு கிடைக்காத அவ, வேறு யாருக்கும் கிடைக்க
கூடாது. என்னை ஏமாத்தினதுக்கு உரிய பலனை, அவ அனுபவிச்சே ஆகணும்’. கதறினான்
ஆனந்த். இதுவரை காதல் குறித்து வாய்திறக்காத சுந்தர் முதல்முறையாக
ஆனந்திடம் பேசினான். ‘மாப்ள உண்மையாக ஒரு உயிரை நாம நேசிச்சா, கண்டிப்பாக
அந்த உயிர் துன்பப் படக்கூடாது என்ற எண்ணம் மட்டும் தான் நம்ம மனசுக்குள்ள
இருக்கும். அது தான் உண்மையான காதல்.

உன்னை நேசித்த ஒரு இதயத்தை
காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், உனக்குள் வந்துவிட்டால், உனது காதல்
செத்துவிட்டதாக அர்த்தம். எனவே காதலுக்கு கல்லறை கட்டுவதை விட்டுவிட்டு,
கண்ணியத்துடன் நடந்து கொள். நிச்சயமாக மிருதுளா உன்னை தேடி வருவாள்.
சுந்தர் இப்படி சொல்லி முடிந்த நேரத்தில் சுளீர் என அடித்தது ஆனந்தின்
முகத்தில் சூரியவெளிச்சம். அப்போது தெளிந்தது ஆனந்தின் போதை மட்டுமல்ல.
காதல் குறித்த அவனது பார்வையும் தான்..

No comments:

Post a Comment