இந்தியாவின் பருவநிலைகள் அனைத்தையும் சமாளிக்கும் வீட்டைக் கட்டுவது சாத்தியமா? சாத்தியம் என்று கூறி வீடு கட்டிக் கொடுக்கும் பல கட்டிடக் கலைஞர்களுக்கு அடுக்கடுக்காய்ப் புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கோடை வெயிலைச் சமாளிக்க முடியாமல் பலரும் செய்யும் முதல் வேலை ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற குளிர் சாதனங்களை வாங்குவதே. வெயிலைச் சமாளிக்க இது சுலபமான மாற்று வழியாக இருந்தலும் இது சரியான முறையல்ல.
குளிர் சாதனங்கள் சுற்றுச் சூழலைப் பாதிக்கின்றன. இது பூமியை வெப்பமடையச் செய்கிறது. மேலும் நுரையீரல் சம்மந்தமான பல நோய்களுக்கும் ஒரு காரணமாக ஆகிறது. இது மட்டுமல்லாமல் உடல் ரீதியான பல பாதிப்புகளையும் உண்டாக்குகின்றன.
மக்கள் இந்தக் குளிர் சாதனங்களைக் கோடைக்காலத்தின் சில வாரங்கள்தான் பயன்படுத்துகிறார்கள். மற்ற நேரங்களில் இவை இயக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் பண முதலீடு வீணாவது மட்டுமின்றிச் சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் அதனால் சுகாதாரமும் பாதிப்படையும்.
குளிர் சாதனங்களை எப்போதுமே பயன்படுத்தும் நாம், இயல்பாகத் தட்பவெப்பநிலைகளைச் சமாளிக்கும் உடல் திறனை இழக்கிறோம். நம் முன்னோர்கள் அனைவரும் ஒழுங்கான உணவு முறை, ஆடைகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர். இந்தத் தலைமுறையினர் வசதி, தேவை என்ற பெயர்களிள் நம் வாழ்க்கையைச் சங்கடமாக்கிக் கொள்கிறோம்.
மாறிவரும் பருவங்களுக்குப் பொருந்தும் வீட்டைக் கட்டுவது சாத்தியம் இல்லை என்பதே உண்மை. இந்தியாவின் தட்பவெப்பநிலை பலதரப்பட்ட விதமாக இருக்கிறது. ஒரு வருடத்தில் இந்தியாவில் நான்கு முறை காலநிலைகள் மாறுகின்றன. வடக்கில் காஷ்மீரின் காலநிலைக்கும், தெற்கே கன்னியாகுமரியின் காலநிலைக்கும் இடையே பல வேற்றுமைகள் உள்ளன.
எனவே இப்போது நமக்கு இரண்டே வழிகள் உள்ளன, அனைத்துப் பருவநிலைகளுக்கும் பொருந்தாவிட்டலும், கிட்டத்தட்ட காலநிலைகளையும் சமாளிக்கக்கூடிய வீடுகளை வடிவமைக்க வேண்டும். இலையென்றால் காலநிலைகளைச் சமாளிக்க நம் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
முதல் சவாலுக்கு நம் வீட்டைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது நமது வீட்டைக் காற்றோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டாவது சவால், கால நிலைகளைச் சமாளிக்கும் விதத்தில் நம் உடலைத் தயார்படுத்துக்கொள்வது. இது நம் மன உறுதியையும் விருப்பத்தையும் பொறுத்தது.
மக்கள் இந்தக் குளிர் சாதனங்களைக் கோடைக்காலத்தின் சில வாரங்கள்தான் பயன்படுத்துகிறார்கள். மற்ற நேரங்களில் இவை இயக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் பண முதலீடு வீணாவது மட்டுமின்றிச் சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் அதனால் சுகாதாரமும் பாதிப்படையும்.
குளிர் சாதனங்களை எப்போதுமே பயன்படுத்தும் நாம், இயல்பாகத் தட்பவெப்பநிலைகளைச் சமாளிக்கும் உடல் திறனை இழக்கிறோம். நம் முன்னோர்கள் அனைவரும் ஒழுங்கான உணவு முறை, ஆடைகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர். இந்தத் தலைமுறையினர் வசதி, தேவை என்ற பெயர்களிள் நம் வாழ்க்கையைச் சங்கடமாக்கிக் கொள்கிறோம்