வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

நகைச்சுவை -1


சிறுவன் ஒருவன் ஒரு குட்டி நாயை ஆசையாய் வளர்த்து வந்தான்.
ஒருநாள் திடீரென நாய் கீழே மயங்கி விழுந்தது. உடனே அவன் அழுதான்.
அவன் தந்தை அங்கு ஓடி வந்து நாயைப் பார்த்தார். நாய் இறந்து விட்டது என்று அவர் எண்ணி,அதை எப்படி பையனிடம் சொல்லி சமாதானம் செய்வது என்று யோசித்தார். பின் ஒரு முடிவு செய்து மகனிடம்,''இதோ பார், உன் செல்ல நாய் இறந்து விட்டது. நாம் என்ன செய்ய முடியும்? இப்போது அதை நல்ல படியாக நமது தோட்டத்தில் புதைத்து விடுவோம். பின்னர் அப்பா உன்னை கடற்கரைக் குக் கூட்டி செல்லுகிறேன். அங்கு குதிரை சவாரி செய்துவிட்டு பின் ஹோட்டலுக்கு செல்வோம். அங்கு உனக்குப் பிடித்ததையெல்லாம் வாங்கித் தருகிறேன். நிறைய ஐஸ் க்ரீமும் வாங்கித் தருகிறேன், ''என்றார்.
பையனின் முகத்தில் இப்போது ஒரு மலர்ச்சி! அப்போது திடீரென நாய் சற்று புரண்டது. பின் உடலை சிலிர்த்தவாறு எழுந்து நடந்து சென்றது.
தந்தை, ''அட, உன் நாய் பிழைத்துக் கொண்டது!'' என்று கூவினார்.
பையன் சிறிது நேரம் யோசித்தான்.பின் சொன்னான், ''அப்பா,அதைக் கொன்று விடுவோம்.
=================================================================================
ஒரு எறும்பு சைக்கிள்ள வேகமா போய்கிட்டு இருந்துச்சாம். 
*
அப்ப குறுக்க ஒரு யானை திடீரென வந்துவிட்டதாம்.
*
எறும்பு சைக்கிள்ள வேகமா சடன் பிரேக் போட்டு நிறுத்தி கோபத்தோடு கேட்டுச்சாம் .......................
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஏண்டா ....... நீ சாவதற்கு என் வண்டி தான் கிடச்சுதா ....?????
-----------------------------------------------------------------------------------------------------------------------------
# எல்கேஜி:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!"
# 5ம் வகுப்பு:
பெண்: "பென்சில் தருவியா..?"
பையன்: "இந்தா..!"
# 10ம் வகுப்பு:
பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?"
பையன்: "ஓ உஸ்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?"
# 12ம் வகுப்பு:
பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை)
பையன்: "உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பென்... இதை யூஸ் பண்ணிக்க..!"
# காலேஜ்:
பையன்: "புதுசா ஒரு பென் வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!".
நீதி:
"எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாளுக பாத்தீங்களா..?"
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார்.
அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,
அவருக்குப் பின்னே சுமார் 50 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.
இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி,
"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ
முறை பார்த்திருக்கிறேன்.
ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை..?
ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?..
"முதலில் செல்வது எனது மனைவி."
"என்ன ஆயிற்று அவருக்கு?"
எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது.,
இரண்டாவது பிணம்?"
அது என் மாமியாருடையது.
என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது.,
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
"இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"
அதற்கு அவர் சொன்னார்,
வரிசையில் போய் நில்லுங்கள்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு டாக்டர்...
நமக்கு நோய் இருக்கனும்னு
ஆசைபடுவார்.!!
ஒரு வக்கீல்...
நமக்கு நெறைய பிரச்சனை இருக்கனும்
னு ஆசைபடுவார்.!!
ஒரு மெக்கானிக்...
நம்ம வண்டிக்கு நெறைய கோளாறு
இருக்கனும்னு ஆசைபடுவார்.!!
ஆனா....
ஒரு திருடன்....
மட்டும்தான் நம்ம நெறைய காசு பணத்தோட
இருக்கனும்னு ஆசைப்படுவான்.!!!
இப்ப சொல்லுங்க...
இதுல யார் நல்லவங்க?????
-------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...
டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
மாணவன்: ஆமா டீச்சர் ... முயற்சி பண்ணினேன்... ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை....
டீச்சர் : வொய்????
மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது....
டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
மாணவன்: இல்ல டீச்சர் .... குளிக்கலல்ல.... எப்பிடிப் போறது?
டீச்சர் : குளிக்கலையா....ஏன்?
மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல....
டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும
மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர் ... அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு....
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க.அவங்க பின்னாலயே ரெண்டு பசங்க போனாங்க.
உடனே அந்த ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன் கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு சொல்லுச்சுங்க...
அதுக்கு நம்ம பசங்க என்ன
சொன்னாங்கனு தெரியுமா?
?
?
?
டேய் மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!
(பசங்க அப்பவே அப்புடி.இப்ப சொல்லவா வேணும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில்
இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....)
கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன்
பங்கு நிறைய....
இன்றைக்கு நான் இருக்கும்
இந்த நல்ல நிலைக்கு நீ
மட்டுமே காரணம் என்
அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என்அதிர்ஷ்டம் ...
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ...
நீ என் தேவதை ...
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??..?
அமைதியா வீட்டுக்கு வந்துடு,
பயப்படாதே....!! எதுவும்
செய்ய மாட்டேன். ....!!!!...!!!!!!
கணவர் : Thank You Darling...
-------------------------------------------------------------------------------------------------------------------------------

மூன்றாம் வகுப்பு மாணவன் :- "டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?

ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான
கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்ப
சரியான பதிலை கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .
அன்று மாலையே ஆசிரியை நூலகத்த
நூல்களை புரட்டி
பதில் கண்டுபிடித்தார் .
ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின்
எடை என்ன என்ற கேள்விக்கு யாரேனும்
விடை கண்டுபிடித்தீர்களா ?
யாருமே பதில் பேசவில்லை .
ஆசிரியை :- (பெருமையாக ) தான்
கண்டுபிடித்த விடையை சொல்ல
மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை
உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா
ஆசிரியை :- ?????????????????
நாங்கெல்லாம் விண்வெளில இருக்க
வேண்டியவய்ங்க..
டீச்சர்.- அவ்வவ்வ்வ்வ்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment