வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

படித்த நகைசுவை கதைகள்

மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். 
கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!'' 
""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?'' 
கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?'' 
நன்றி ;தமிழ் SMS Jokes,முகநூல்முயற்சியின் பாதைகள் கடினமானவை <br />முடிவுகள் இனிமையானவை-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------மனோபலம்***********ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தார்.கனமான இரும்புக்குண்டுகளை அனாயாசமாகத் தூக்குவாr தாங்குவார் .
அவர் யாரிடமும் தோற்றது கிடையாது.ஒரு நாள் பாரசீகக் கவிஞர் ஷா அந்த பயில்வானை பார்க்க வந்தார்.அந்த சமயம் பயில்வான் மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார்.
கவிஞர் அருகில் இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள் சொன்னார்கள்''பயில்வானை யாரோ ஏளனமாகப் பேசி விட்டார்களாம். அதனால் தான்கோபமாக இருக்கிறார்.''
இதைக் கேட்ட கவிஞர் ஷா அதி சொன்னார் '' எத்தனையோ கடுமையான எடைகளைத் தாங்கும் இந்த பயில்வான் ,யாரோ கூறிய ஓரிரெண்டு வார்த்தைகளை த்தாங்க முடியாதவராய் இருக்கிறாரே? ஐயோ பாவம்!''-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------காலை வைத்துக் கண்டுபிடி *************************
புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.
மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.
தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.
பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.
ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.
பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.
"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.
தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.
நன்றி இருவர் உள்ளம் தளம்-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------பயம்! பயம்! பயம்!--------------------------ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். 
பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார்.
என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. 
சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். 
உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.
உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...*************************
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
"போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து "அப்படிப்போடு...........அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

No comments:

Post a Comment