முட்டைக்குள் ஒளிந்திருக்கும்ரகசியம்!
நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும்.நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள்,கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிரியர்களின் அன்றாட உணவில் அவசியம் இருக்க வேண்டும்.அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள்.சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து,மாவுச்சத்து முதலியவை முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.சைவம் சாப்பிடுபவர்களேஅதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது.முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான உணவாக மாற்றுகிறது.ஒரு முட்டையில் ஒளிந்திருக்கும்சத்து உடலுக்கு உகந்ததாக உள்ளது. ஆரோக்கியமாக இருப்பதில் முட்டை பெரும் பங்கை வகிக்கிறது.குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் ஏன் எல்லோரிடமும் கூட ஊட்டச்சத்துக் குறைவால் சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது.பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு.ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலைஅதிக அளவி உற்பத்தி செய்யும்.எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும்.இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின்அளவு அதிகரிக்காமல் இருக்கும்.முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம
வருக வணக்கம்
வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்
முட்டைக்குள் ஒளிந்திருக்கும்ரகசியம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment