வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

நகைசுவை,1

மனைவி : “உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட, 
அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”. 
கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும் 
கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் 
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க.. 
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
ஒரு கணவனும் மனைவியும் வெளியே சென்று வீடு திரும்பினர். 
அப்போதுதான் அவர்களிடம் கதவை 
திறக்க திறவுகோல் இல்லை என அறிந்தனர். 
” அண்ணலும் ‘நோ கீ’னார்… அவளும் ‘நோ கீ’னார்”
ம்னைவி : “என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து 
வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ 
புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?” 
கணவன் : “பேசாம தூங்கு, காலையில அவன் செத்து 
கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்..”
மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? 
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-“உன்னோட இந்த காமெடிதான்”
மனைவி:- “ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று 
ஒரு பகுதி கூட கிடையாதா?”
கணவன் :-“ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு 

ஒரு பகுதி இருக்கே!”
என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், 
குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா? 
அட! என் வீட்டுக் காரருக்கு உடம்பு சரியில்லன்னு 
சொல்ல வந்தேன்.
மாலா:- ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற…
வாஷிங் மெஷின் எங்க? 
கீதா:- அது ஆபீஸ் போயி்ருக்குடி
கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே 
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே 
கணவன்:- துவைக்கிறவனுக் குதானே கஷ்டம் தெரியும்
மனைவி:- உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?
கணவன்;- நீதான் வந்த..
மனைவி;- பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா பேசிகிட்டு இருந்த்தீங்களே
மனைவி:- இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?
கணவன்;- எப்படி சொல்றே?
மனைவி:-எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்……..
மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம் 
கணவன் : ரொமப தேங்ஸ். 
மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடு வன்னு அப்பப்போ சொல்வேன்.
பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.
கணவன் : கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சாப்பாடு
நிறைய வச்சுட்டு நீ கொஞ்சமா சாப்பிடுவ,
இப்பல்லாம் உனக்கு அன்பு கொறஞ்சுடுச்சு. 
மனைவி : நீங்க இப்பல்லாம் நல்லா சமைக்க ஆரம்பிச் சிட்டீங்களே.
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

No comments:

Post a Comment